வருகின்றது அப்பிள் நிறுவனத்தின் iPhone 6 (வீடியோ இணைப்பு)

Read Time:1 Minute, 17 Second

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone-களுக்கு கைப்பேசி சந்தையில் தனி மதிப்பு உண்டு.

இதனால் அந்நிறுவனம் புதிதாக ஒவ்வொரு கைப்பேசிகளை வெளியிடும்போதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழமை.

அதே போலவே தற்போது iPhone 6 எனும் புதிய கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளதுடன் எதிர்ப்பார்பையும் அதிகரித்து வருகின்றது.

அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் தனது புதிய தயாரிப்பான iPhone 6 மற்றும் Apple iWatch ஆகியவற்றினை வெளியிடக் காத்திருக்கின்றது.

புதிய iPhone 6 ஆனது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரை, 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பவற்றினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள நிலையில் மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Previous post தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இந்தியா இழந்தது.
Next post M.H.M.அஷ்ரப்f மரணத்தில் புதைந்து போன மர்மங்கள்.