மக்களிற்கு அவர்கள் மீது அனுதாபமுள்ள தலைவர் தேவை- அரசாங்கம் பதவி விலகவேண்டும் - சஜித்பிரேமதாச..! - Sri Lanka Muslim

மக்களிற்கு அவர்கள் மீது அனுதாபமுள்ள தலைவர் தேவை- அரசாங்கம் பதவி விலகவேண்டும் – சஜித்பிரேமதாச..!

Contributors

அரசாங்கம் பதவிவிலகி மக்கள் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதிகாரத்திற்கு வருவதற்கு அரசநிர்வாகத்தை நடத்துவதற்கும் திறமையுள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வளங்களை திறமையான நிதி மற்றும் பொருளாதார முகாமைத்துவத்திற்கு உட்படுத்தக்கூடியவர்கள் தனது கட்சியில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிற்கு அவர்கள் மீது அனுதாபமுள்ள தலைவர் தேவை என்பதால் அவர்கள் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் பதவி விலகி ஐக்கிய மக்கள் சக்திக்கு வழிவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team