மக்களை வெறுப்படையச் செய்யும் வகையில் ஊடகத்தை பயன்படுத்தியமை குறித்து விசாரணை - Sri Lanka Muslim

மக்களை வெறுப்படையச் செய்யும் வகையில் ஊடகத்தை பயன்படுத்தியமை குறித்து விசாரணை

Contributors

மக்களை வெறுப்படையச் செய்யும் வகையில் ஊடகத்தை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிக்க எம்ரீவி மற்றும் எம்பிசி நிறுவனத்தின் தலைவர் ராஜ மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 11ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களை வெறுப்படையச் செய்யும் வகையில் ஊடகத்தை பயன்படுத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு பிரிவினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி ஔிபரப்பு தொடர்பிலேயே மங்கள சமரவீர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.- அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team