மக்காவில் வருகிறது உலகின் மிகப்பெரிய ஓட்டல் (Photo) - Sri Lanka Muslim

மக்காவில் வருகிறது உலகின் மிகப்பெரிய ஓட்டல் (Photo)

Contributors
author image

World News Editorial Team

உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் மக்காவில் கட்டப்பட உள்ளது. 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.21 ஆயிரம் கோடி) செலவில், 45 மாடிக் கட்டிடத்தில் 10 ஆயிரம் அறைகள் கொண்டதாக இந்த ஓட்டல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

அப்ராஜ் குதாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டல், மெக்காவில் உள்ள மனாபியா எனும் இடத்தில் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இந்த ஓட்டலை தர் அல் ஹந்தாஸாஹ் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

 

 

70 உணவு விடுதிகள், 4 ஹெலிபேட்கள் கொண்ட இந்த ஓட்டல் 2017ம் ஆண்டு கட்டிமுடிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

 

சவுதி அரேபிய நிதி அமைச்சகத்தின் உதவியுடன் கட்டப்படும் இந்த ஓட்டல், ஹஜ் பயணத்துக்காக மெக்கா வரும் முஸ்லிம்கள் தங்கிச் செல்வதற்கு பெரிதும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

பாலைவனத்தில் கட்டப் பட்டிருக்கும் பாரம்பரியமான கோட்டைகளைப் போன்ற வடிவ மைப்புடன் திகழும் இந்த ஓட்டலில் ஒரு பேருந்து நிறுத்தம், ஷாப்பிங் மால்கள், மாநாட்டுத் திடல் போன்றவை இடம்பெறுள் ளன.

makka

Web Design by Srilanka Muslims Web Team