பயலின் சூறாவளியின் தாக்கம் வடக்கிலும் - Sri Lanka Muslim

பயலின் சூறாவளியின் தாக்கம் வடக்கிலும்

Contributors

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருப்பதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 29 படகுகளும் முல்லைத்தீவில் 12 படகுகளும் சேதமடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

கடற்படையினர் மற்றும் மீன்பிடி திணைக்களம் இணைந்து சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றதுஃ

பைலின் புயல் காரணமாக இந்தியாவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team