மடகஸ்காரில் பேருவளை வர்த்தகர் வபாத்! - Sri Lanka Muslim
Contributors

மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன், மேலும் இரு வர்த்தகர்கள் காயமுற்றுள்ளனர்.

கடந்த  (14) இலங்கை நேரப்படி 5.30மணியளவில் இக் கார் விபத்து இடம் பெற்றுள்ளதுடன் முஹம்மத் ரவூப் முஹம்மத் ரிலா என்ற இரத்தினக்கல் வர்த்தகரே மரணமானவராவார்.

இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

சீனன் கோட்டையைச் சேர்ந்த முஹம்மத் இப்ராஹிம் முஹம்மத் ஹுஸைன், முஹம்மத் இக்பால் முஹம்மத் இஷ்ரத் ஆகிய இருவருமே காயமுற்று மடகஸ்கார் நாட்டில் ஆஸ்பத்திரியொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைக்காக வாடகை காரில் பயணம் செய்த சமயம் மற்றோர் காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரு வாகனங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளன.

விபத்தில் மரணமான முஹம்மத் ரிலாவின் ஜனாஸா அன்றைய தினம் நள்ளிரவு மடகஸ்காரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கையில் இருந்து மடகஸ்காருக்கு வியாபாரம் மேற்கொள்ளச் சென்ற வர்த்தகர்கள் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்குபற்றினர்.

விபத்தில் பலியான வர்த்தகர் கடந்த நான்கு வருட காலமாக மடகஸ்காரில் தங்கி நின்று இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

 

பீ.எம்.முக்தார்

Web Design by Srilanka Muslims Web Team