மட்டக்களப்பு பாலமுனை கிராமத்துக்கு புதிய அபிவிருத்தி திட்டங்கள் கையளிப்பு! - Sri Lanka Muslim

மட்டக்களப்பு பாலமுனை கிராமத்துக்கு புதிய அபிவிருத்தி திட்டங்கள் கையளிப்பு!

Contributors

கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்ட
மட்டக்களப்பு பாலமுனை கிராமத்தில் சுமார் 3 கோடியே 50 இலட்சம் செலவில் அரசு நிர்மாணித்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இப்புதிய திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது .
. . பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் எம் எம் முபாரக் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தேசத்துக்கு மகுடம் – ஜெய்க்கா திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட 15 கொங்ரீட் வீதிகளையும் – அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்களையும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ. எம் ஹிஸ்புல்லாஹ் மக்கள் பாவனைக்காக கையளித்தார் .
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணச்சபை உறுப்பினர் எம் . எப் . சிப்லி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் .ttn

Web Design by Srilanka Muslims Web Team