மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் மரஸாவின் பட்டமளிப்பு விழா - Sri Lanka Muslim

மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் மரஸாவின் பட்டமளிப்பு விழா

Contributors

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் கீழ் இயங்கி வரும் மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் பகுதி நேர மதரஸா அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த மாணவர்களின் ஹாபிழ் முதலாவது பட்டமளிப்பு விழா புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.ஏ.றஹீம் தலைமையில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் செயலாளர் டீன் பைறூஸ்,மட்டக்களப்பு இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அப்துல் கபூர் மதனி,காத்தான்குடி ஜம்மியதுல் உலமாத் தலைவரும் காதி நீதிபதியுமான அலியார் பலாஹி,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கிர்,அலி சப்ரி,காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்மாப் பள்ளிவாயல் பிரதம பேஷ் இமாம் மௌலவி றிஸ்வி மற்றும் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மத்ரஸதுல் ஹிக்மா லிதஹ்பீழில் குர்ஆன் பகுதி நேர மதரஸாவில் அல்குர்ஆனை முழுமையானக மனனம் செய்த ஹாபிழ்களான அப்துல் சத்தார் முஹம்மது ஸஜாத்,காலிதீன் முஹம்மது அப்ரி,கலீலுர் ரஹ்மான் முஹம்மட் நபீல்,பீர் முஹம்மது பஸ்லுல் ஹக்,அப்துல் சத்தார் முஹம்மது ஸாகிர்,அப்துல் சத்தார் முஹம்மட் முனவ்வர்,ஆதம்பாவா முஹம்மட் ஆஷிக்,முஹம்மது சுஜாவுதீன் உமைர் உஸாமா,முஹம்மது பாறூக் அஹமட் பரீஹ் ஆகியோர் அல்ஹாபிழ் பட்டம் பெற்று வெளியாகினர்.

 

Web Design by Srilanka Muslims Web Team