மத ஸ்தலங்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: அமெரிக்கா » Sri Lanka Muslim

மத ஸ்தலங்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: அமெரிக்கா

Contributors

இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. அமெரிக்க தூதுவர் மிக்சேல் சிசன், இன்று (21) இலங்கைத் தேசிய இவஞ்சலிக்கல் கூட்டமைப்பினரைச் (National Evangelical Alliance of Sri Lanka) சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது காலி, ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது பௌத்த பிக்குகளைக் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியமை குறித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ள தூதரகப் பேச்சாளர் ஜூலியானா ஸ்பவென், மதத்தலங்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் .(ad)

Web Design by Srilanka Muslims Web Team