மனிதனின் பகைவன்...! - Sri Lanka Muslim
Contributors

உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு உணவு மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் எதை உண்ண வேண்டும்? எதை உண்ணக்கூடாது என்ற விடயம் மனிதனை சதா சிக்கலில் தள்ளிவிடும் பிரச்சினை. உடல், உள ரீதியாக நன்மை பயப்பவை எவை? தீங்கு விளைவிப்பவை எவை? என்பன தொடர்பில் சரியான வழிகாட்டலை தேடும் படலம் மனிதன் தோன்றிய நாள் முதலே இடம்பெற்று வருகிறது.

ஆனாலும் மனிதனைப் படைத்த இறைவன், இப்பிரபஞ்சம் உள்ளிட்ட அனைத்தையும் படைத்து எது நன்மை தருபவை? எது தீங்கு விளைவிப்பவை என்பதை விளக்கியே இருக்கிறான். உணவு வகைகளை அதிகளவில் உண்பது தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் மருத்துவ ரீதியில் பயன்தரக்கூடியவையாகவும் உள்ளன.

இவை இவ்வாறிருக்க, மனிதனோடு ஒட்டிவாழும் சைத்தான் மனிதனின் உள்ளங்களில் விதவிதமான ஊசலாட்டங்களை ஏற்படுத்துகிறான்.

நன்மையை தீமையைப் போன்றும் தீமையை நன்மையைப் போன்றும் அலங்கரித்து காட்டுகிறான்.

அந்த மாயையில் விழும் மனிதன் தன்னுடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் தீமையை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அதனால் இறைவனின் வழிகாட்டுதலை எப்போதும் கடைப்பிடித்து நடக்கவேண்டிய தேவை மனிதனுக்கு உள்ளது.

மனிதனை தீமைகளின் பக்கம் அழைத்துச்செல்வதோடு நின்றுவிடாமல் அவனை அத்தீமைகளிலேயே மூழ்கடித்துவிடக்கூடிய பண்பையும் சைத்தான் கொண்டிருக்கிறான்.

குறிப்பாக நீதியைப் போதிக்கும் வழிமுறைகளை தடம்புரட்டிக் காட்டுதல், சத்தியத்தை அசாத்தியமாக காட்டுதல் விசத்தை அமிர்தமாக காட்டல், முற்களைப் பூக்காளாக காட்சிப்படுத்தல் உள்ளிட்ட இந்த மாயாஜாலங்களிலிருந்து தப்பித்கொள்வதே மனிதன் புத்திசாலித்தனம்.

மனிதர்களே… பூமியிலுள்ள வற்றில் உங்களுக்கு உண்ண அனுமதிக்கப்பட்ட பரிசுத்தமானவற்றையே உண்ணுங்கள். இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் சைத்தனின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக, அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவானான். அவன் உங்களை தூண்டுவதெல்லாம் பாவத்தையும் மனக்கேடான விஷயங்களை செய்யும்படியாகவும் அல்லாஹ்வை பற்றி நீங்கள்அறியாதவற்றைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
(அல் குர்ஆன் 2:168,69)

Web Design by Srilanka Muslims Web Team