மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் கிளை - Sri Lanka Muslim

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் கிளை

Contributors

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் கிளை அலுவலகமொன்றை புத்தளத்தில் நாளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் 06 கிளை அலுவலகங்களை திறப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா குறிப்பிட்டார்.

புத்தளம் பிரதேச மக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைபாடுகளை பதிவுசெய்வதற்காக அனுராதபுரம், கண்டி அல்லது கொழும்பிற்கு செல்லவேண்டியுள்ளதை கவனத்திற்கொண்டே இந்த கிளை அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் சேவையொன்றை பெற்றுக்கொள்வதில் அல்லது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதில் பிரச்சினை காணப்படின், இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியுமென பிரதீபா மஹானாமஹேவா கூறினார்.

கிளிநொச்சி, நுவரெலியா, தம்புளை, குருநாகல், மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் கிளை அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

வட மாகாணத்தில் முல்லைத்தீவில் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு கிளை அலுவலகமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.-(newsfirst)

Web Design by Srilanka Muslims Web Team