
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மங்கள சமரவீர பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்!- இராவணா பலய
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன் பகிரங்க விவாதத்திற்கு வர தயாராக இருப்பதாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மங்கள சமரவீர விருப்பும் எந்த தொலைக்காட்சியிலும் விவாதத்தை வைத்து கொள்ள முடியும். சிறிகொத்த போன்ற தலைவர்களை உருவாக்கிய இடத்தை அசுத்தப்படுத்தாது இந்த சவாலை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்ற நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தற்காலை தாக்குதலில் பங்கு பற்றிய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காட்சிக்கு வைத்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிய ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தப்பட்டன.
சனல் 4 தொலைக்காட்சியினருக்கு அனுராதபுரத்திற்கு அப்பால் செல்ல இடமளிக்கவில்லை என்பதால் அது தோல்வியடைந்தது.
எனினும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேடை ஏற்றிய நாடகத்தை கொழும்பில் நடத்திய மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்திய தமிழ் மக்களை பஸ்களில் ஏற்றி சிறிகொத்தவிற்கு அழைத்து வந்தது நாட்டை காட்டிக் கொடுக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்கள போன்ற திருடர்களை தலைமைத்துவச் சபைக்கு நியமித்தமையானது ஐக்கிய தேசியக் கடசிக்கு பானையில் இருந்து அடுப்பில் விழுந்ததற்கு ஈடானது என்றார்.lw