மன்­மோகன் சிங் வெட்கப்பட வேண்டும் - ராவணா பலய - Sri Lanka Muslim

மன்­மோகன் சிங் வெட்கப்பட வேண்டும் – ராவணா பலய

Contributors

(Vi) தெற்­கா­சி­யாவின் வல்­ல­ரசு என்ற ரீதியில் பொது நல­வாய மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங் கலந்து கொள்­ளா­மை­யா­னது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். இதனால் இலங்­கைக்கு எது­வி­த­மான பாத­கமும் கிடை­யாது என ராவணா சக்­தியின் தலைவர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் மீது உண்­மை­யான அக்­கறை இருக்­கு­மானால் மாநாட்டில் கலந்து கொண்டு பிரச்­சி­னை­களை பேசி­யி­ருக்க வேண்­டு­மென்றும் தேரர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக இத்­தே­கந்த சத்தா­திஸ்ஸ தேரர் மேலும் தெரி­விக்­கையில்,

மாநாட்டில் இந்­திய பிர­தமர் கலந்து கொள்­ளா­மை­யா­னது இலங்­கைக்கு பாத­க­மா­னது அல்ல. இதனை அர­சாங்கம் பொருட்­ப­டுத்­தாது மாநாட்டை கோலா­க­ல­மாக ஆரம்­பித்­துள்­ள­தோடு பல்­வேறு நாடு­களின் தலை­வர்­களும் இள­வ­ரசர் சார்ள்ஸும் கலந்து கொள்­கின்றனர். இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் தெற்­கா­சி­யாவின் வல்­ல­ர­சான இந்­தி­யாவின் பிர­தமர் இம் மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்­லை­யென்றால் அது பிர­தமர் மன்­மோகன் சிங்­கிற்கே வெட்­க­மாகும். எமக்கு எந்தப் பாதிப்பும் கிடை­யாது.

தமிழர் மீது உண்­மை­யாக இலங்கை தமிழ் மக்கள் மீது அக்­கறை இருந்­தி­ருந்தால் பொது நல­வாய மாநாட்டில் மன்­மோகன் சிங் கலந்து கொண்டு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை பேசி­யி­ருக்க வேண்டும்.

அதி­கார ஆசைஆனால் தமிழ் மக்கள் மீது இந்­தியப் பிர­த­ம­ருக்கு அக்­கறை கிடை­யாது. அவர் அக்­க­றைப்­ப­டு­வ­தெல்லாம் 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்கே ஆகும். மத்­தியில் ஆட்­சி­ய­மைக்க வேண்­டு­மானால் தமிழ் நாட்டின் ஆத­ரவு சிங்­கிற்கு அவ­சி­ய­மாகும். எனவே தான் ஜெய­ல­லி­தா­வி­னதும் தமிழ் நாட்டு அர­சியல் தலை­வர்­க­ளி­னதும் அழுத்­தங்­க­ளுக்கு அடி­பணிந்து மாநாட்டில் கலந்து கொள்­வதை சிங் தவிர்த்துக் கொண்டுள்ளார் இது வெட் கப்பட வேண்டிய நிலையாகும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team