மன்னர் சல்மானின் அதிரடியான தீர்மானம் - Sri Lanka Muslim
Contributors
author image

BBC

சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்துக்கு மொராக்கோ மன்னரின் விஜயத்தை செய்தி சேகரிக்க வந்திருந்த புகைப்படச் செய்தியாளர் ஒருவரை சௌதி ராஜாங்க மரியாதைகள் நெறிமுறைத் துறையின் தலைவர் தாக்கிய சம்பவத்தை அடுத்து அவரை அந்தப் பதவியிலிருந்து சௌதி மன்னர் நீக்கியிருக்கிறார்.

 

இரண்டு மன்னர்களும் விமான நிலையத்தில் நடந்த வரவேற்பில் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக்கொள்ளும் நேரத்தில், அங்கிருந்த ஒரு புகைப்படச் செய்தியாளரை ராஜாங்க மரியாதைகள் நெறிமுறைத்துறை தலைவர் மொஹமது அல் டொபாய்ஷி தாக்குவது பின்னணியில் வீடியோக் காட்சிகளில் தெரிந்தது.

 

இந்த சம்பவத்தின் ஒரு சிறிய வீடியோக் கீற்று சௌதி அரேபியாவில் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது, பகிர்ந்து கொண்டவர்களில் பலர் அல் தொபாய்ஷி மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

 

அவர் இந்த அளவுக்கு வேகமாக பதவிநீக்கம் செய்யப்பட்டது, மன்னர் சல்மான் ஆட்சிக்கு வந்து முதல் நூறு நாட்களில் முடிவெடுப்பதில் காட்டுவதாகக் கூறப்படும் உறுதியைப் பற்றிய கருத்துணர்வை மேம்படுத்தியிருக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team