மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அமைச்சர் ரிஷாட்டுக்கு பாராட்டு - Sri Lanka Muslim

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அமைச்சர் ரிஷாட்டுக்கு பாராட்டு

Contributors

கடவுள் அன்பை விரும்புபவன், அன்பு செலுத்தும் இடத்தில் கட வுளை காணலாம். அதேபோல் நாம் கடவுளுக்கு அன்பு செலுத் தினால் தான் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். அதேவேளை இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ள மண்ணின் மைந்தனும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் வருகையும் பாராட் டுக்குரியது என்றும் கூறினார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினதும், மன்னார் மாவட்ட செயலகத்தின் பங்களிப்புடனும் மன்னார் புனித செபஸ்தியன் தேவாலய மூன்றலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மன்னார் மாவட்ட செயலாளர் தேசப் பிரிய தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசுகையில் கூறியதாவது : ஒவ்வொரு மதமும், இன ஒன்றுமையை எடுத்துக் கூறுகின்றது. விட்டுக் கொடுப்பும், புரிந்துர்ணவுமே எமக்கு தேவையாக வுள்ளது. அதனை ஏற்படுத்தி கொள்ள இந்த நிகழ்வு ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்

Web Design by Srilanka Muslims Web Team