மன்னார் நானாட்டான் பொன்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் குறிக்கிடும் தமிழ் இனவாதிகள் - Sri Lanka Muslim

மன்னார் நானாட்டான் பொன்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் குறிக்கிடும் தமிழ் இனவாதிகள்

Contributors

எம்.ஷியாம்: நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவுகண்டல் கிராமத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு தொடர்தும் வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களின் ஆட்களினாலும் தடைகள் போடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர், குறித்த காணியினை இரண்டாக பிரித்து புலிகளினால் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கும்,  பொன்தீவுகிராம மக்களுக்கும் வழங்குவதாக தீர்மானித்திருந்தார்

இந்த நிலையில் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியில் இன்று காலை 7 முதல் அந்த காணியின் உரிமையாளர்கள் வீட்டு திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மீண்டும் குறித்த தரப்பினர் அதற்கும் எதிர்ப்பை தெரிவித்து அடாவடியாக தடுக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் .

புலிகளினால் அனைத்து சொத்துக்களும் பறிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி முனையில் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் தமது செந்த மண்ணில் 23ஆண்டுகளின் பின்னரும் மீள் குடியேறவிடாது தமிழ் இனவாதிகளால் தடுக்கப்பட்டு வருகிறனர் .

எமது சொந்த மண்ணில் நாம் மீள்குடியேற புலி பாசிச சிந்தனை கொண்ட தமிழ் இனவாதிகள் சிலர் தொடர்தும் சூழ்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் . என்று மன்னார் முஸ்லிம்கள் கவலை தெரிவிகின்றனர் .

தமிழ் மக்கள் முஸ்லிம்களுடன்    சுமூகமான உறவை பேணிவருகின்ற போதும் அரசியல் நோக்கம்கொண்ட சில அரசியல்வாதிகள் மற்றும் மத குரு ஆகியோரின் தூண்டுதலினால் இவை தொடார்ந்தும் இடம்பெற்று  வருவதாகவும் முஸ்லிம்கள் தெரிவித்தனர்

Web Design by Srilanka Muslims Web Team