மன்னார்: முஸ்லிம் மீள்குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ? - Sri Lanka Muslim

மன்னார்: முஸ்லிம் மீள்குடியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ?

Contributors

மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தோழிக்க கிராமமான பொன்தீவு கண்டல் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் ரீதியாக வேற்று மத மக்களைவேற்று மத மக்களை(முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதை) குடியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1866ஆம் ஆண்டு குடியேறிய நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக மாற்று மதத்தைச் சார்ந்த (முஸ்லிம்கள்)  மக்கள் தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.இதற்கு நானாட்டான் பிரதேச செயலாளர் துணை போவதாக கூறி குறித்த கிராம மக்கள் நேற்று காலை நானாட்டான் பிரதேசச் செயலகத்திற்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குறித்த பொன் தீவு கண்டல் கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.சந்திரையா அவர்களுக்கும் இடையில் காலை 10.30 மணியளவில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றது.இதன்போது மன்னார் நகர சபை முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இடம்பெற்ற பேர்ச்சுவார்த்தையின் பின் குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்தில் தற்போது இடம் பெற்று வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக நானாட்டான் பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.தற்போது காணி வழங்கப்பட்ட வேற்று மத மக்களை மதங்களுக்கிடையில் பிரிவினைவாதம் ஏற்படாதவாறு குறித்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

தற்போது குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்திற்கு அருகாமையில் வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்காக அரச காணிகள் உள்ளதா என்பது தொடர்பாக அவதானம் வருகின்றது. குறித்த காணிகள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அந்த மக்கள் அவ்விடத்திலேயே குடியேற்றம் செய்யப்படுவார்கள் என பிரதேசச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.-TC

Web Design by Srilanka Muslims Web Team