மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள “முகநூல் முக வரிகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள “முகநூல் முக வரிகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள 22 கவிஞர்களின் முகநூல் கவிதைகளின் தொகுப்பான முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நூலாசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில் நடைபெற்றது.

இதில் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம் முன்னிலை அதிதியாகவும்,பேராசிரியர் செ.யோகராசா இலக்கிய அதிதியாககவும் கலந்து கொண்டனர்.இங்கு நூல் பற்றி எழுத்தாளர்களான உமா வரதராஜன்,சத்தார் எம்.பிர்தௌஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.நூலின் முதல் பிரதியை சறோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன் பெற்றுக் கொண்டார்.

தலைமையுரை நூலாசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா
இன்று நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ற மிகமுக்கியமான ஊடகம் முகப்புத்தகம் ஒரு காலத்தில் எங்கள் ஆக்கங்கள் பத்திரிகைகளிலே வரவேண்டுமாக இருந்தால் நாங்கள் அதிக பிரயத்தனம் எடுக்கவேண்டியிருந்தது.நாங்கள் பல அக்கங்களை அனுப்பியிருந்தால் நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒன்று அல்லது இரண்டு ஆக்கங்கள்தான் பிரசுரமாகும் என மூத்த எழுத்தாளர்கள் சொல்கின்றார்கள்.

ஆனால் அந்த நிலைமாறி இன்று நாங்களே எழுத்தாளர்களாகவும்,நாங்களே ஆசிரியர்களாகவும் செயற்படுவதற்கு இந்த முகப்புத்தகம் வழிவகுத்திருக்கின்றது. அந்த வகையிலே முகப்புத்தகத்திலே நல்ல கவிதைகளை எழுதுகின்ற ஆற்றல் உள்ளவர்கள் மருமுனையில் இருக்கின்றார்கள் அவ்வறானவர்களின் கவிதைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கவிதைகளை நூலாக்கியிருக்கின்றேன்.

இலக்கிய அதிதி பேராசிரியர் செ.யோகராசா
‘முகநூல் முக வரிகள்’; கவிதை நூல் மிகவும் அமைந்திருக்கின்றது கவிஞர்கள் நன்றாக நல்ல கருத்தாடல்களைக் கொண்டு கவிதைகளை புனைந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல கருத்துக்களைக் கொண்ட இவ்வாறன கவிதைத் தொகுப்புக்கள் வெளிவருவது வரவேற்கத்தக்கதாகும்.

கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்
2000 ஆண்டு வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் கவிதையிலே காலம் தொடத் தொடர வடிவம் உள்ளடக்கம் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன தமிழைப் பொறுத்தமட்டில் யாப்பை அடிப்படையாகக் கொண்ட செய்யுள் வடிவமானது புதிய போக்குகளுக்கு இடமளிக்கும் விடையத்தில் இறுக்கம் காட்டியதில்லை.

கவிதை உருவாக்கத்தில் பின்பற்றப்படும் யாப்பு நிமித்தம் மரபுக் கவிதை.புதுக்கவிதை எனக்குறிப்பிடும் போக்கு 20ஆம் நூற்றான்டின் முற்பகுதியில் தொடங்கியது.யாப்பின் போக்கானது காலந்தோறும் மாறிக்கொண்டுவந்ததனால் அது கவிதை உருவாக்கத்திற்குத் தடையில்லை என்ற நிலையில் புதுக்கவிதையானது மரபான தமிழ்கவிதையின் புதிய போக்காகும்.

புதுக்கவிதை என்ற சொல்லாக்கம் மேலத்தய இலக்கியத்தின் தாக்கம் காரனமாக வந்ததென்பதை நாங்கள் விளங்க வேண்டும்.

மூத்த எழுத்தாளர் உமாவரதராஜன்
தமிழ் மொழிக்கும் அதன் கவிஞர்களுக்கும் செழுமையான வரலாறொன்று இருக்கின்றது.என்றோ எழுதப்பட்ட சங்க இலக்கியத்தின் நுட்பங்களையும், சித்திரங்களையும் அதேபோல் பழந்தமிழ் இலக்கியங்களையும் இன்றைக்கு எழும வருகின்றவர்கள் வாசித்தால் அவர்களுடைய எழுத்து மேலும் சிறப்படையும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதத் தொடங்கிய சூழல் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது அப்போதெல்லாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே எழுத்தாளர்களும் ,கவிஞர்களும் இருந்தார்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட பத்திரிகைகள் கால இதழ்கள் இதஷைர பிரசுரங்களை அவர்கள் நம்பவும்,நாடவும் வேண்டியிருந்தது.

ஒரு நூல் வெளியீடு என்பது எழுத்தாளர்களைப ;பொறுத்தவரையில் பிகப்பெரிய இலட்சியம் மலையுச்சிக் கோயிலைத் தரிசிக்கத் துடிக்கும் ஒரு யாத்திரீகனின் கனவு பின்னொருகாலத்தில் எலைக்ரிக் மீடியா (நுடுநுவுசுழுNஐஊ ஆநுனுஐயு ) என்றழைக்கப்படும் மின்னணு ஊடகம் பலரை ஈர்த்தது பெரும் திரளான மக்கள் மத்தியில் உடனடித் தாக்கத்தைப் பிரதிபலிக்கக் கூடிய மின்னணு சாதனங்களான வானெலி,தொலைக்காட்சி போன்றவை நமது படைப்பாளிகளையும் கவர்ந்ததில்வியப்பில்லை.

இந்த நிகழ்வுகளை பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தொகுத்து வழங்கினார்.

b b.jpg2 b.jpg2.jpg3 b.jpg2.jpg3.jpg6 b99

Web Design by The Design Lanka