மருத்துவ அதிகாரிக்கு எதிராக அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்..! - Sri Lanka Muslim

மருத்துவ அதிகாரிக்கு எதிராக அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம். ஜவாஹிர் அவர்களின் நிருவாக முறைகேடுகள், நிருவாக அடக்குமுறைகள், கொவிட் தொடர்பான நோயாளிகளின் தவறான நிருவாக நடைமுறைகள் மூலம் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அவரது செயற்பாடுகளை கண்டித்து பதில் வைத்திய அத்தியட்சகரை நீக்கி அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுக்கொண்டிருந்தும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாத நிலையில் இன்று நாங்கள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தள்ளப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் . இதில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முற்றாக தடைப்படுவதுடன் அவசரசிகிச்சை, டயலைசிஸ், மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சைப்பிரிவுகள் என்பன வழமைபோல் இயங்குகிறது. எங்களின் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தனர்.

வைத்தியசாலை ஸ்தம்பித்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team