மருமகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனார் கைது - Sri Lanka Muslim

மருமகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனார் கைது

Contributors

மருமகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனாரை ஆனமடு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

தனது மகனின் மனைவியான மருமகளின் தனிமையை போக்குவதற்காக துணைக்குச் செல்வதாக கூறிச் சென்று மருமகளை பாலியல் வல்லுறவுக்கு இவர் உட்படுத்தியுள்ளார்.

ஆனமடு கராயக்குளம் பொலிஸ் கிராமத்தில் வசிக்கும் 46 வயதுடைய சந்தேக நபர், தனது மகள் வீட்டில் தனிமையில் இருப்பதாகக் கூறி மகளுக்குத் துணைக்கெனத் தெரிவித்து தனது மகனின் மனைவியை அவளது வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வந்ததன் பின்னரே தனது மருகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது தந்தையுடன் சென்ற தனது மனைவியைத் தேடிச் சென்ற குறித்த யுவதியின் கணவரிடம் அவ்யுவதி தன் மீது தனது மாமனார் மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பில் முறையிட்டுள்ளார்.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட யுவதியும் கணவரும் ஆனமடு பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறை்பாட்டையடுத்து சந்தேகநபரான பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட யுவதி வைத்திய பரிசோதனைக்காக ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனமடு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.tm

Web Design by Srilanka Muslims Web Team