மலேசியாவில் வீசா விதிமுறைகளை மீறிய நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது - Sri Lanka Muslim

மலேசியாவில் வீசா விதிமுறைகளை மீறிய நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது

Contributors

சுற்றுலா வீசாவில் மலேசியாவுக்கு சென்று, அந்த வீசா விதிமுறைகளை மீறி தொழில் முயற்சிகளில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஆயிரம் பேர் அளவில் இவ்வாறு வீசா விதிமுறை மீறியமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டுள்ளதாக வெளினாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா வீசாவில் மலேசியாவுக்கு பயணிப்போர் அங்கு வேலை தொழில் நடவடிக்கைகளைல் ஈடுபடுவது குறித்து தினந்தோறும் முறைப்பாடுகள மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு கிடைப்பதாக அவர் சுட்டிக்கட்டினார்.

வீசா நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதாகியுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒருவிதத்திலும் பொறுப்புக்கூறாது என்று அப்பணியகம் இன்று அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியாவுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் பலர் அங்கு வேலைவாய்ப்புக்களைத் தேடி அழைந்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் விடுதலையை தம்மால் உறுதி செய்ய முடியாது என்றும் அதற்காக பணியகம் ஒருபோதும் உதவப்போவதுமில்லை என்றும் பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரந்தெனிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team