மஸ்ஜிதுக்கு சொந்தமான காணியை பெற்றுத்தாருங்கள் ! - Sri Lanka Muslim

மஸ்ஜிதுக்கு சொந்தமான காணியை பெற்றுத்தாருங்கள் !

Contributors

எப்.எம்.பர்ஹான்: பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிக் காணியை சகல தரப்பினர்களும் பெற்றுத்தருவதற்கு உதவுமாறு கோரி மட்டு-கர்பலாவில் கையழுத்து திரட்டும் பணி:

மட்டக்களப்பு –ஆரையம்பதி காத்தான்குடி கர்பலா கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்ஆ  பள்ளிவாயலான கர்பலா ஜாமிஉல் மனார் ஜூம்ஆ  பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிக் காணியை அப்பகுதி தமிழ் மக்களும் ,ஆரையம்பதி பிரதேச செயலகம் மற்றும்  ஆரையம்பதி பிரதேச சபை மற்றும் அதிகாரிகளும் தர மறுப்பதாகவும் இக் காணியை பெற சகல தரப்பினர்களும் பெற்றுத்தருவதற்கு உதவுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ  தொழுகைக்கு முன்பும் பின்பும் பொது மக்களிடம் கையழுத்து திரட்டும் பணி இன்று குறித்த  ஜூம்மா பள்ளிவாயலுக்கு முன்னால் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இக் கையழுத்து வேட்டையில் பொது மக்கள் பலரும்  கலந்து கொண்டு தமது கையழுத்துக்களை இட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

62

Web Design by Srilanka Muslims Web Team