மஹரகம கபூரிய அரபிக் கல்லூரி அதிபர் வெளியேற்றம் - முஸ்லிம் சமூகம் தொடர்ந்து மௌனம்! - Sri Lanka Muslim

மஹரகம கபூரிய அரபிக் கல்லூரி அதிபர் வெளியேற்றம் – முஸ்லிம் சமூகம் தொடர்ந்து மௌனம்!

Contributors

மஹரகம கபூரிய அரபிக் கல்லூரியில் இருந்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றின் மூலம், அக்கல்லூரி அதிபர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மௌலவி நபார் கல்லூரி அதிபராக செயற்படக்கூடாது என நேற்று புதன்கிழமை, 15 ஆம் திகதி குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் கல்லூரியில் இருந்து வெளியேறியுள்ளார்.

எனினும் இந்த நீதிமன்றத் தீர்ப்பை துஸ்பிரயோகம் செய்துள்ள கபூரியா அரபுக் கல்லூரி நிர்வாகம், இதனை முற்றுமுழுதாக தமக்கு சாதகமாக்கி, அரபுக் கல்லூரிக்கு சென்று நீதிமன்றத்தின் உத்தரவு ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என சகலருக்கும் பொருந்தும் எனக்கூறி இன்று வியாழக்கிழமை 16 ஆம் திகதி உடனடியாக வெளியேற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனது.

எனினும் சில மாணவர்கள் தொடர்ந்து, தாம் தொடர்ந்து கல்லூரியில் இருக்க வேண்டுமென விடாப்பிடியாக தற்போதுவரை நிற்கின்றனர்.

இதனால் அங்கு கல்வியைத் தொடர்ந்த மாணவர்களின் நிலை சூனியமாகியுள்ளது.

கபூரியா விடயத்தில் முஸ்லிம் சமூகம் காக்கும் மௌனம், கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team