"மஹிந்தானந்தவிற்கு ஒரு துளியேனும் வெட்கம் இருந்தால், உடனடியாக பதவி விலக வேண்டும்"..! - Sri Lanka Muslim

“மஹிந்தானந்தவிற்கு ஒரு துளியேனும் வெட்கம் இருந்தால், உடனடியாக பதவி விலக வேண்டும்”..!

Contributors

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் இன்றைய (08) தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

சீன கழிவுக் கப்பலுக்கு பணம் செலுத்தப்படுமா என நாம் கேட்ட போது இந்த அரசாங்கம் மண்ணைச் சாப்பிட்டுக் கொண்டு ஒரு சதமும் வழங்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியது.

மஹிந்தானந்த உள்ளிட்ட ஆளும் தரப்பினர் தாய், தந்தையர் மீது ஆணையிட்டு சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்படாது என கூறினர்.

எனினும் தற்பொழுது அரசாங்கம் 69 லட்சம் அமெரிக்க டொலர் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மஹிந்தானந்தவிற்கு ஒரு துளியேனும் வெட்கம் இருந்தால், உடனடியாக பதவி விலகிச் செல்ல வேண்டும்.

மஹிந்தானந்த பதவி விலகிச் செல்ல வேண்டுமென்றே கோருகின்றோம் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team