மஹிந்த பதவி விலக இடமளிக்க முடியாது? - Sri Lanka Muslim
Contributors

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக முகநூல்களில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையெனவும்,  நாட்டு மக்களினதும் மதத் தலைவர்களினதும் பூரண ஒத்துழைப்பபை பெற்றிருக்கும் பிரதமர், தமது பதவியை இராஜினாமாச் செய்ய ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் புத்தசாசன அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்தார்.

புத்தசாசன கலாசார சமய அலுவல்கள்  அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

சில முகநூல்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாகவும் தற்போதைய நிதி அமைச்சர் பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கௌரவத்தைப் பெற்ற தலைவர். முப்பது வருட காலம் நாட்டில் தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை ஒன்றிணைத்து மக்களை சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்தவர் என்றும் சிறந்த உடல் நிலையுடன் அவர் தற்போது உள்ளார் என்றார்.

நாட்டின் முக்கியமாக நடவடிக்கைகளை எவ்வித தங்குதடையும் இன்றி அவர் மேற்கொண்டு வருகிறார். அவரால் தொடர்ந்தும் அப்பதவியை சிறப்பாக முன்னெடுக்க முடியும். சில அடிப்படைவாதக் குழுக்களும், தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக செயற்படும் சில சக்திகளும் இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு அதுவல்ல எனவும் தெரிவித்த தேரர்,

 

Web Design by Srilanka Muslims Web Team