விமல் வீரவன்ச சஜித் பிரேமதாச இரகசிய சந்திப்பு - கொழும்பில் பரபரப்பு..! - Sri Lanka Muslim

விமல் வீரவன்ச சஜித் பிரேமதாச இரகசிய சந்திப்பு – கொழும்பில் பரபரப்பு..!

Contributors

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலசின் கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்க்ள கூறுகின்றன.

இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்களை மிகவும் இரகசியமாக இருசாராரும் காத்துவருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலிப் வெதஆராச்சியின் மகளது திருமணம் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வினிடையே பிரதமர் மஹிந்தவுடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நீண்டநேரம் பேச்சு நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team