மஹிந்த ராஜ­ப­க்சவின் அர­சாங்கம் அடுத்தவருடம் கவிழ்க்­கப்­படும் - இது அஸாத்­ சாலி - Sri Lanka Muslim

மஹிந்த ராஜ­ப­க்சவின் அர­சாங்கம் அடுத்தவருடம் கவிழ்க்­கப்­படும் – இது அஸாத்­ சாலி

Contributors

2014 மார்ச் மாதத்­துடன் அர­சாங்­கத்தின் ஆட்சி கவிழும். அர­சாங்­கமே தலையில் மண்ணை வாரிப் போட்­டுள்­ளது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத்­ சாலி தெரி­வித்­துள்ளார். அர­சாங்­கத்தில் இருக்கும் அமைச்­சர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணையும் காலம் ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் அனைத்து எதிர்க்­கட்­சி­களும் இணைந்து அர­சாங்­கத்தை அமைப்­பதே புத்­தி­சா­லித்­தனம் எனவும் அவர் தெரி­வித்தார்.
எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு இயக்­கங்­க­ளினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
அர­சாங்­கத்தின் வரவு–செல­வுத்­திட்­டமும் இன்­றைய பொரு­ளா­தார சிக்­கல்­களும் மக்­களால் தாங்­கிக்­கொள்ள முடி­யாத அளவில் உள்­ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் வரி­களை அற­விட்டு அப் ­ப­ணத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவின் குடும்பம் உண்டு வரு­கின்­றது.
கசினோ சூதாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் சர்­வ­தேச வியா­பா­ரி­க­ளுக்கும் ஏற்ற வர­வு செ­ல­வுத்­ திட்­டத்­தினை ஆரம்­பித்து அப்­பாவி மக்­களின் வயிற்றில் அடித்­து­விட்­டனர். இந்த நிலை மேலும் அதி­க­ரிக்­கும்.
சர்­வ­தேச நாடு­க­ளிடம் வாங்­கிய கடன்­களை கட்ட வேண்­டு­மாயின் மக்­க­ளிடம் வரி அற­விட்டு பணத்தைக் கொள்­ளை­ய­டிப்­பது மட்­டுமே ஒரே வழி. அத­னையே ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச இன்று செய்து வரு­கின்றார்.
அதேபோல் இன்று அமைச்­சர்­களே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­பட ஆரம்­பித்­து­ விட்­டனர். அர­சாங்­கத்தால் கொண்டு வரப்படும் திட்­டங்­க­ளுக்கு அமைச்­சர்­களே முரண்­பட ஆரம்­பித்­து­ விட்­டனர். விலையேற்­றமும், பண நெருக்­க­டியும் சிறு­பான்மை மக்களுக்கு மட்டுமல்ல அனை­வ­ருக்கும் என்­பதை இன்று பலர் உணர்ந்­து­ விட்­டனர்.
எனவே, எதிர்­வரும் மார்ச் மாதத்­தோடு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவின் அர­சாங்கம் கவிழ்க்­கப்­படும். மக்­களே அர­சாங்­கத்­தினை வீழ்த்தி புதிய அத்­தி­யா­யத்­தினை நாட்டில் ஆரம்­பிப்­பார்கள்.
மேலும், இன்று சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­க­ளுக்கு அர­சாங்கம் பணிந்­து­விட்­டது. மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தையும் பிரிவி­னை­யையும் தூண்­டு­வ­தற்­கா­ககே ஜனா­தி­பதி சர்­வ­தே­சத்­தினை பகைத்துக் கொள்­வதைப் போன்று நாட­க­மா­டு­கின்றார். ஆனால், அர­சாங்­கத்தின் சாவி இன்று சர்­வ­தே­சத்­திடம் அகப்­பட்டு விட்டது.
அதன் காரணத்தினால்தான் தற்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி யுத்தத்தில் இறந்த மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் கணக்கெடுப்பினை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team