மஹேல ஜயவர்த்தனவுக்கு எட்டு வருடங்களின் பின் பெண் குழந்தை - Sri Lanka Muslim

மஹேல ஜயவர்த்தனவுக்கு எட்டு வருடங்களின் பின் பெண் குழந்தை

Contributors

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவாத்தன – கிறிஸ்டினா சிரிஸேன தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மஹேலவ ஜயவர்த்தனவின் மனைவி கிறஸ்டினா குழந்தை பிறப்பினை எதிர்பார்த்து பாகிஸ்தான் அணியுடனான மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் இருந்து சுய விருப்பின் பெயரில் விலகிக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மஹேலவின் மனைவி பெண் குழந்தை ஒன்று பிரசவித்துள்ளார். மஹேல – கிறிஸ்டினா ஜோடி கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியின் முதல் குழந்தை இதுவாகும்.

தனக்கு பெண் குழந்தை பிறந்ததை மஹேல ஜயவர்த்தன டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

mahala family

 

mahala family2

 

mahala family3

Web Design by Srilanka Muslims Web Team