மாணவர் விசா நடைமுறைகள் எளிதாக்குகிறது ஆஸ்திரேலியா - Sri Lanka Muslim

மாணவர் விசா நடைமுறைகள் எளிதாக்குகிறது ஆஸ்திரேலியா

Contributors

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, அதிக மாணவர்கள் வருவதற்கு வசதியாக, விசா நடைமுறைகளை எளிதாக்க, ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது, ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர் விசாவில் செல்லும் பலர், படிப்பு முடிந்து, ஓட்டல், பெட்ரோல் நிலையங்கள் போன்றவற்றில் வேலை செய்கின்றனர். இவர்களில் பலர், அந்நாட்டு இளைஞர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இதன் காரணமாக, முந்தைய ஆஸ்திரேலிய அரசு, மாணவர் விசாவில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியது.

இதனால், இந்தியா, சீனாவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால், ஆஸ்திரேலிய கல்வித்துறையின் வருவாய் குறைந்தது. இதையடுத்து, வெளிநாட்டு மாணவர்களை கவர, விசா நடைமுறையை எளிமைப்படுத்த தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் படிக்க, அவர்களது, வங்கி கணக்கில், குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் கணக்கு இருக்க வேண்டும், என முந்தைய விசா நடைமுறையில்நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நிபந்தனையை தளர்த்த ஆஸ்திரேலிய அரசு முன்வந்துள்ளது. இத்தகவலை, ஆஸ்திரேலிய, குடியுரிமைத் துறை அமைச்சர் ஸ்காட் மாரிசன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கிரிஸ்டபர் பாயன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team