மாத்தறையில் பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவு – பிக்குகள் எச்சரிக்கை! - Sri Lanka Muslim

மாத்தறையில் பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவு – பிக்குகள் எச்சரிக்கை!

Contributors

மாத்தறை – இஸ்ஸத்தின் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த (வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டு)பள்ளிவாசலை  உடனடியாக மூடும்படி பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவின் பணிப்பாளர் திசாநாயக்கா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த உத்தரவுக் கடிதம் வக்பு சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முஸ்லிம்கள் குறைவாகவே வசிப்பதாகவும், ஒன்றரை கிலோ மீற்றர் பகுதிக்குள் 3 பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும், இவ்வாறு பள்ளிவாசல்கள் காணப்படுவது அவசியமற்றதெனவும் குறித்த பிரதேச பள்ளிவாசல் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும், இந்நிலை தொடருமாயின் அங்கு மோதல் நிலை உருவாகுமெனவும் பிரதேச பௌத்த குருமார் பௌத்தசாசன அமைச்சுக்கு எச்சரித்துள்ளனர்.
இதையடுத்தே பௌத்த சாசன அமைச்சினால் மாத்தறை – இஸ்ஸதீன் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறு வக்பு சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்விவகாரம் குறித்து பிரதேச முஸ்லிம்கள் பொலிஸ்மா அதிபருக்கு இன்று 07-11-2013 அறிவித்துள்ளதுடன், முஸ்லிம் கவுன்சிலிடமும் முறையிட்டுள்ளனர். இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
-jfm

Web Design by Srilanka Muslims Web Team