மாநாட்டில் நான் பங்கேற்பேன்:முஸாமில் - Sri Lanka Muslim
Contributors

பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தீர்மானம் எடுக்காது உள்ளபோதும் இந்த மாநாட்டில் தான் மனப்பூர்வமாக பங்குபற்றவுள்ளதாக கொழும்பு மாநாகர மேயர் ஏ.ஜே.எம்.முஸாமில் தெரிவித்துள்ளார்.

தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இளவரசர் சாள்ஸ்சுக்கு வழங்கும் வரவேற்பில் கலந்து கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டு நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் பிரதான வீதியோரம் உள்ள மக்கள் தமது சுற்றாடல்களை சுத்தமாக வைத்திருப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் மாநாடு தொடர்பான சகல ஏற்பாடுகளும் விரைவில் பூர்த்தியாகிவிடுமென்றும்  அவர் கூறினார்.tm

Web Design by Srilanka Muslims Web Team