மாமியார் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொன்ற மருமகள்! - செல்போன் பேச்சால் வந்த வினை. - Sri Lanka Muslim

மாமியார் தலையில் அம்மிக் கல்லைப் போட்டுக் கொன்ற மருமகள்! – செல்போன் பேச்சால் வந்த வினை.

Contributors

மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (1 1/2), கீர்த்தி (6 மாதம்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார்அதனால் இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதனை மாமியார் செல்வி கண்டித்ததால்,மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறின்போது மாமியார் செல்வி குளோரியின் செல்போனை உடைத்ததாக கூறப்படுகிறது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த குளோரி, இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாமியார் செல்வி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொன்றார். இதனையடுத்து இன்று காலை 7 மணி அளவில் குளோரின் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team