மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடைபெறும் – ஐ.தே.க

Read Time:1 Minute, 37 Second

எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதமளவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் பெரும்பாலும் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டில் நடாத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் முனைப்புக்களை ஆளும் கட்சி மேற்கொண்டு வருவதாக ஆளும் கட்சியின் உள்ளத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபைத் தேர்தல்களை விடவும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கே தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியை ஐக்கியப்படுத்தும் நோக்கில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வரலாற்று ரீதியான தியாகத்தை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சியைப் பாதுகாப்பதாக குரல் கொடுக்கும் பலர் உண்மையில் கட்சியின் நலனுக்காக குரல் கொடுப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அச்சத்தால் மஹிந்த அரசு வழங்கியது விடுமுறை! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு
Next post உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி :முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்