மாலைதீவின் ஜனாதிபதி இன்று முற்பகல் இலங்கை வந்தார்! » Sri Lanka Muslim

மாலைதீவின் ஜனாதிபதி இன்று முற்பகல் இலங்கை வந்தார்!

Contributors

மாலைதீவின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் தனது பாரியார் சகிதம் இன்று முற்பகல் இலங்கை வந்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகர்த்த விமான நிலையம் வந்தடைந்த அன்னாரை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்றார்.
மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இரு நாடுகளினதும் நல்லுறவுகளை மேலும் மேம்படுத்தும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார்.

அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் மாலைதீவு ஜனாதிபதி பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team