மாலைதீவு மொத்த சனத்தொகையில் 20 வீதமானவர்கள் இலங்கையில் வாழ்கின்றனர் - அமைச்சர் சம்பிக்க - Sri Lanka Muslim

மாலைதீவு மொத்த சனத்தொகையில் 20 வீதமானவர்கள் இலங்கையில் வாழ்கின்றனர் – அமைச்சர் சம்பிக்க

Contributors

அனாதைகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். போர், அரசியல் மற்றும் மத ரீதியான பிரச்சினைகளினால் நிர்க்கதியாகும் மக்கள் இலங்கையை நோக்கி படையெடுக்கின்றனர்.

மாலைதீவு மொத்த சனத்தொகையில் 20 வீதமானவர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

விக்னேஸ்வரன் வடக்கில் சிங்களவர்களை குடியேற்ற விரும்பவில்லை. போரில் வெற்றி கொண்ட போதிலும் நாட்டின் எந்தவொரு நிலத்திலும் வாழும் உரிமை இன்னமும் கிட்டவில்லை. சிலர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்,

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் நாட்டை சமஷ்டி முறைமைக்குள் தள்ள முயற்சிக்கின்றன என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கங்கொடவில சோம தேரரின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team