மாலைதீவு விமான நிலையத்தில் துன்புறுத்தப்படும் இலங்கையர்கள்! - Sri Lanka Muslim

மாலைதீவு விமான நிலையத்தில் துன்புறுத்தப்படும் இலங்கையர்கள்!

Contributors

ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் கீழ் உள்ள மாலைத்தீவு குடிவரவுத் துறை பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

2022 செப்டெம்பர் 12 ஆம் திகதி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் நோக்கில் இங்கிலாந்திலிருந்து மாலைதீவிலுள்ள இலங்கை  உயர்ஸ்தானிகராலய காரியாலயத்திற்கு செல்வதற்காக வேண்டி மாலைத்தீவு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஆனால் மாலைதீவு குடிவரவு அதிகாரிகள் குறிப்பிட்ட இலங்கையரிடம் இருந்து அவரை மாலே நாட்டிற்குள்  அனுமதிக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கேட்ட அதிகாரி ஹலீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .  (அவரது புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது)

“மாலைதீவு குடிவரவு அதிகாரிகளுக்கு பணம் செலுத்தி விரைவான சேவையைப் பெறுவது இலங்கை பயணிகளின் சாதாரண வழக்கமான நடைமுறையாகும்”  என குடிவரவு அதிகாரி ஹலீம் என்பவர் குறித்த  இலங்கை பயணியிடம் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், இலங்கையர் லஞ்சம் கொடுக்க மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், மாலைதீவில் உள்ள இலங்கை தூதரகத்திலும் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

குடிவரவுத் துறை பிரதானியாக நியமனம் பெறுவதற்காக  முகமது அஹ்மத் ஹுசைன் எனும் குறித்த இந்த அதிகாரியால்  வழங்கப்பட்டுள்ள  கல்விச் சான்றிதழ்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதும் இங்கு  குறிப்பிடத்தக்கதாகும் . அவர் ஜனாதிபதி சோலியின் அரசியல் செல்வாக்கு காரணமாக அரசியல் நியமனம் பெற்றவர் என்று அறியப்படுகின்றது.

மாலத்தீவு குடிவரவு காரியாலயத்தில் கடமையாற்றும் அதிகாரிகளின்  தொழில் திறன் இல்லாமை, நேர்மையின்மை மற்றும் பின்னணியில் செயற்படும் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களால், குறித்த இலங்கைப் பயணி குடிவரவு அதிகாரிகளின் காவலில் 4 மணிநேரம் வீணாக கழிக்க  வேண்டியதாயிற்று.

பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் இதுவிடயமாக உடனடியாக  மாலத்தீவு குடிவரவுத் துறை பிரதானி “முகமது அஹமட் ஹுசைனை” தொடர்பு கொண்டு இது விடயமாக புகாரளித்து இதற்கான நியாயமான தீர்வை  வேண்டியுள்ளார் .

வெளித்தோற்றத்தில், இலங்கையர்களுக்கு ஒன்-அரைவல் விசா அனுமதிக்கப்பட்டாலும், மாலைதீவுக்கு  பயணிக்கும் இலங்கைப் பயணிகளுக்கு மாலைதீவு குடிவரவுத் காரியாலயத்தின்  துன்புறுத்தல்கள் கெடுபிடுகளுக்கு  அடிக்கடி முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சுமார் 49,000 மாலைதீவுவாசிகள்  சுற்றுலா விசாவில் இலங்கையில் வாழ்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் இலங்கையின் பொதுச் சேவைகளின் முழுப் பலன்களைப் பயன்படுத்துகின்றனர், கொழும்பில் வசிக்கும் மாலத்தீவு குடும்பங்கள் கூட, இலங்கை இலவச தேசிய சுகாதார சேவையைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

உண்மைகள் இவ்வாறிருக்க, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்  சரியான காரணமின்றி மாலத்தீவு குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, உத்தியோகபூர்வ அறிவித்தலோ அல்லது  மன்னிப்பு கோரலோ  எதுவுமின்றி அவரை விடுவித்தது ஏன் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆராய வேண்டும்.

மாலத்தீவு பயணிகளின் கடவுச்சீட்டை பரிசீலிக்க இலங்கை குடியேற்ற திணைக்கள காரியாலயம்  தாமதப்படுத்தினால் என்ன நடக்கும்?

கொழும்பில் அதிக காலம் தங்கியிருக்கும் மாலைதீவு பயணிகளின் கடவுச்சீட்டுகள் பரிசீலிக்கப்பட்டு முறையான   நடவடிக்கை எடுக்கப்படுமா ?

ஜனாதிபதி யாமீன் ஜனாதிபதியாக இருந்தகாலத்தில் , மாலைத்தீவுக்கு வுக்குச் சென்றபோது இலங்கையாருக்கு  ஒருபோதும் இவ்வாறான  பிரச்சினைகள்  இருக்க வில்லை, ஆனால் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் பதவிக்கு வந்ததும், இப்போது இவ்வாறான பாரபட்சம் செய்வது மட்டுமல்லாமல் இலங்கை பயணிகளை வெளிப்படையாக பல்வேறு தவறான செயல்களும்  முன்னெடுக்கப்படுகின்றது .

மாலே விமான நிலையத்தில் இலங்கையர்களுக்கு எதிராக  நடைபெறும் துன்புறுத்தல்கள் குறித்து மாலைதீவில் உள்ள மூத்த அரசியல்வாதி ஒருவரிடம் கேட்டோம். தற்போதைய ஜனாதிபதி இப்ராகிம் முகமது சோலிஹ் பொதுப் பணத்தை கொள்ளையடித்து பல்வேறு மோசடிகளையும் செய்து பணக்காரர் ஆனவர் என்று அவர் கூறுகின்றார்.

மேலும் அந்த கறுப்புப் பணத்தில் இருந்து இலங்கையில் கோடிக்கணக்கான சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மாலத்தீவின் தற்போதைய ஜனாதிபதி உண்மையில் கண்ணாடி வீட்டினுள்  இருந்து கற்களை எறிபவர் என்று அவர் மேலும் கூறுகின்றார்.

நன்றி :- நஷனல் அலர்ட்
தமிழில் அபூ ஷிபா 

Web Design by Srilanka Muslims Web Team