மின்னலுக்கு மின்னிய ரிசாத் -அலரி மாளிகையில் நடந்தது இதுதான் - Sri Lanka Muslim

மின்னலுக்கு மின்னிய ரிசாத் -அலரி மாளிகையில் நடந்தது இதுதான்

Contributors
author image

ஊடுருவி

தவிர்க்க முடியாத காரணங்களால் உரிய நேரத்திற்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகின்றோம்

 

அமைச்சர் ரிசாத் – மின்னல் ரங்காவுக்கு அறைந்ததாக கூறப்படும் செய்தி தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற பூரணமானதும் பரபரப்பானதுமான தகவல்கள் இதோ!

 

அமைச்சர் ரிசாத் ,அமீர் அலி எம்பி மற்றும் செயலாளர் ஹமீட் ஆகியோர் நேற்றிரவு 11 மணிக்கு அலரி மாளிகைக்கு சென்றுள்ளனர்.

 

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை எதுவித முடிவுக்கும் வராத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதற்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

 

இதன் போது கட்சி சார்பாக முஸ்லிம் சமுகத்தை முன்னிலைப்படுத்திய 20 அம்சக் கோரிக்கைகளை கட்சி முன்வைத்து பேச்சு நடத்தியிருந்தது.

 

குறித்த 20 அம்சக் கோரிக்கைள் தொடர்பிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவுடன் மேற்கொள்ளும் பொருட்டே ரிசாத்; தலைமையிலான மேற்படி மூவரும் நேற்றிரவு 11 மணிக்கு அலரி மாளிகை சென்றிருந்தனர்.

 

அப்போது அங்குள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக சாப்பாட்டு அறையில் ஹரீஸ் எம்பி ,ரங்கா ,காமினி செனரத் உட்பட இன்னும் சிலர் இராப்போசனம் உண்டு கொண்டிருந்தனர்.

 

இதன் பின்னர் இராப்போசனத்தை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்த ரங்கா, அமைச்சர் ரிசாதை எதிர்கொண்டார்.

 

அப்போது ரங்காவை நோக்கிய ரிசாத், ‘நீங்கள் மின்னலில்
கூறுகின்றீர்களே, மகிந்தவினதும் பசிலினதும் சிறைக்கைதி ரிசாத் என்றும், அதனால் அரசை விட்டும் அவர் வெளியேற மாட்டார் என்றும் அப்படிப்போனால் ரிசாதை சிறையில் அடைப்பார்கள் என்றும் நீங்கள் மின்னலில் கூறுகின்றீர்களே! உங்களால் அதனை நிரூபிக்க முடியாமா?

 

இதோ இங்கே நிற்கின்றார் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத். உங்களிடம் என்னைப்பற்றிய பைல் இருந்தால் இப்போதே இவரிடம் கொடுங்கள். நான் இதனை சவாலாக விடுக்கின்றேன்.
அரசிலிருந்து ஒரு சதத்தையேனும் நான் களவாடவில்லை. நான் உண்மையாயான முஸ்லிம். உண்மையான முஸ்லிமாக வாழ்கின்ற ஒருவன். அதனால் நான் மிகவும் தூய்மையாக இருக்கின்றேன்’ என்றும் மிக உரத்த குரலில் சத்தமாக கூறினார் ரிசாத்.

 

இதைக் கேட்டு ஆடிப்போன ரங்கா செய்வதறியாது திகைத்து நின்றார்.
அப்போது காமினி செனரத்தின் பார்வை ரங்காவின் பக்கம் திரும்பியது.
ஏதாவது அமைச்சருக்கு எதிரான பைலை ரங்கா தருவாரோ அல்லது கூறுவாரோ என எதிர்பார்ப்பதுபோல் அவரது பார்வை அப்போது அமைந்திருந்ததாம்.

 

ஆனால் ரங்காவோ வாயடைத்துப் போய் மூச்சுப்பேச்சின்றி நின்றுள்ளார்.அவ்வாறு நின்றது மட்டுமன்றி சுற்றுமுற்றிலும் பார்த்தார் ரங்கா. பலர் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
இதனால் தனது பொய் அம்பலமாகி விட்டது என்பதை உணர்ந்து வெட்கித்து நின்றார் ரங்கா.

 

இதனை அடுத்து ஏதோ கூறிக் கொண்டு கைநீட்டியவராக நெஞ்சை நிமித்திக் கொண்டு வந்தார். அந்த நிமிடமே தனது ஆத்தாமையை வெளிக்காட்டும் வகையில் ரிசாதை நோக்கி ஆவேசமாக கை ஓங்கினார்.

 

இதனை எதிர்பார்த்திராத ரிசாத் தன்னை உடன் சுதாகரித்துக் கொண்டு ரங்காவின் ஓங்கிய கையை தடுத்து மறுபுறம் ரங்காவின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார்.

 

இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பு அடைந்தது.
உடன் அவ்விடத்தில் நின்ற ஹரீஸ் எம்பி மற்றும் காமினி செனரத் உட்பட பலர் இருவரையும் விலக்கியுள்ளனர்.

 

சற்று தள்ளி நின்ற அமீர் அலியும் வை.எல்.எஸ் ஹமீடும் ஓடோடி வந்து ரங்காவிடமிருந்து அமைச்சரை விலக்கி எடுத்து அமைத்திப்படுத்த முயற்சித்தனர்.

 

இந்த நிலையில் மீண்டும் ஆவேசம் உற்ற ரிசாத் ‘ நான் உனது மகிந்தவுக்கு பயப்படுபவன் அல்ல. என்னை படைத்த இறைவனுக்கு மாத்திரம் தான் பயப்படுபவன். நீ இரவில் இங்கிருக்கின்றாய் பகலில் மகிந்தவுக்கும் எமக்கும் எதிராக செயற்படுகின்றாய். நாங்கள் மகிந்தவுடன் இருப்பது இந்த சமுகத்திற்கு ஏதும் நல்லது நடக்கும் என்பதற்காகத்தான்.

 

இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுவரை முடிவெதுவும் எடுக்கவில்லை. தேவையேற்படின் இந்த சமுகத்திற்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாளையே மைத்திருக்கு ஆதரவளிக்கவும் தயாராக இருக்கின்றோம்.

 

சமுதாயத்திற்கு இவர் எந்வொரு உத்தரவாதமும் தராவிட்டால் இன்றே நாம் வெளியேறுவோம் என்பதை அவரின் அலரி மாளிகைக்குள்ளிருந்தே நான் தைரியமாக சொல்கின்றேன் இதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என ரங்காவை நோக்கி இன்னும் மிக ஆவேசமாக கத்தினார் ரிசாத்.

 
இதன்பின்னர் காமினி செனரத்தை நோக்கி கைநீட்டிய ரிசாத் ‘ உங்கள் ஜனாதிபதி எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக எமது சமுதாயத்திற்கு உத்தரவாதம் தராவிட்டால் நானும் எனது கட்சியும் அடுத்த நிமிடமே இந்த அரசைவிட்டு வெளியேறுவோம் என்பதை உங்களிடம் தைரியமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

 

இந்த ரங்காவைப் போல் சதிகாரர்கள் அல்லர் நாம.; கடந்த 10 வருடங்களாக மிகவும் நேர்மையான முறையில் இந்த அரசில் பயணித்துள்ளோம்.

 

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கும் வெளியேற்றப்பட்ட மூதூர் முஸ்லிம்களை நோன்பு காலத்திற்குள் விரைவாக குடியேற்றம் செய்ததற்கும் இந்த அரசும் அமைச்சர் பசிலும் செய்த உதவிக்கு நன்றிக்காகத்தான் இந்த நிமிடம் வரை அரசுடன் இருந்து பொறுமை காத்து வருகின்றோம்.

 

இந்த அரசை விட்டு வெளியேறுவதற்கு அளுத்கம மற்றும் பள்ளிவாசல் சம்பவங்கள் என எத்தனையோ சம்பவங்கள் கிடைத்தன என்பதையும் நீங்கள் மறந்து விடக் கூடாது என்றும் காமினி செனரத்தை நோக்கி ரிசாத் கடுமையாக கூறினார்.

 

இவ்வாறு ரிசாத் கடும் ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஹரீஸ் எம்பி உட்பட பலர் அமைச்சர் ரிசாதை அமைதிப்படுத்திக் கொண்;டிருந்த தருணத்தில் சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்த ரங்கா கன்னத்தை பொத்தியவராக அந்த இடத்திலிருந்து ஓட்டம் எடுத்தார்.
இதுதான் நடந்த அந்தச் சம்பவம்.

 

சரி இது ஒருபக்கம் இருக்க இந்த நடுநிசிக்கு அலரி மாளிகைக்கு முகா எம்பி ஹரீஸ் எதற்கு சென்றார்.

 

ஜனாதிபதித் தேர்தலில் முகா இதுவரை எதுவித முடிவினையும் எடுக்காத சூழ்நிலையில் ரங்காவுடன் ஹரீஸ் எம்பி அலரி மாளிகைக்குள் ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குள்ளேயே சென்று இரவு உணவு உண்ணும் அளவுக்கு ஹரீஸூக்கும் இந்த அரசுக்கும் இருக்கும் நெருக்கம்தான் என்ன?

 

முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக இன்றைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவூப் ஹக்கீம் அரசுடன் பேரப்பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவை எல்லாவற்றையும் முறியடிக்கும் வகையில் ஒட்டு மொத்தமாக கட்சியை எதுவித நிபந்தனையுமின்றி அரசுக்கு விற்றுவிட ஹரீஸ் முனைந்துள்ளார் என்பதையே அவர் அந்த நடுநிசியில் அலரி மாளிகைக்குள் இருந்ததன் மூலம் எடுத்துக் காட்டுகின்றது.

 

பகல் வேளைகளில் பத்திரிகைககளில்; முஸ்லிம்களின் காவலனாக காட்டிக் கொண்டு இரவு வேளைகளில் பின்கதவால் அலரி மாளிகைக்குச்சென்று நாமலுடனும் காமினி செனரத்துடனும் இவர் உரையாடுவதன் மர்மம் தான் என்ன?

 

முஸ்லிம் சமுதாயத்தையும் கட்சியையும் மடையர்களாக்கி இவர் அரசிடம் திறைமறைவில் எதனை பெற்றுக்கொண்டார்? பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார் என்பதே இன்று இந்த சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்விகளாகும்.

 

முஸ்லிம் சமுதாயத்தின் சதிகாரராக செயற்படும் இந்த ரங்கா அண்மையில் ரிசாதின் கட்சியைச்சேர்ந்த ஹூனைஸை பிரித்தெடுத்து சதியைச்செய்தார்.

 

இப்போது ஹரீஸின் மூலமாக மற்றுமொரு முஸ்லிம்களின் தேசியக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை உடைத்து சின்னாபின்னமாமாக்க சூழச்சி செய்கின்றார்.

 

கடந்த ஞாயிறு தனது மின்னல் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் அனைவரும் மகிந்தவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று கூறியும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மகிந்தவை விட்டு வெளியேற வேண்டும் என பகிரங்கமாக கூறிய ரங்கா, அடுத்த நாள் இரவு ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குள்ளேயே உணவு உண்கின்றார் என்றால் இந்த ரங்காவின் நோக்கம் தான் என்ன?

 

முஸ்லிம் அரசியல் வாதிகள் வெளியேறியதன் பின்னர் ஒருவேளை மகிந்த வெற்றி பெற்றால் முஸ்லிம் சிங்கள கலவரத்திற்கு தூபமிட இந்த ரங்கா முயற்சி செய்கின்றாரா என்ற நியாயமான கேள்வியும் முஸ்லிம்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.

 

ஏனெனில் முஸ்லிம்களின் விரோதியான பொதுபலசேனா எனும் சதிகாரக் கும்பலும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளதே மேற்படி நியாயமான கேள்வி முஸ்லிம் சமுதாயத்தினர்; மத்தியில் எழக்காரணமாகும்.

 

ஒருவேளை முஸ்லிம் விரோத சக்திகளின் ஏஜன்டாக இந்த ரங்கா செயற்படுகின்றாரா?

Web Design by Srilanka Muslims Web Team