மின்னல் இனவாத நிகழ்ச்சிக்கு தடையினை ஏற்படுத்த வேண்டும் - இன ஒற்றுமைக்கான சர்வதேசத்திற்கான மையம் வேண்டுகோள் - Sri Lanka Muslim

மின்னல் இனவாத நிகழ்ச்சிக்கு தடையினை ஏற்படுத்த வேண்டும் – இன ஒற்றுமைக்கான சர்வதேசத்திற்கான மையம் வேண்டுகோள்

Contributors
author image

Press Release

இந்த நாட்டில் இனவாத சக்திகளை அழித்து மக்களது இன,மத பாதுகாப்பை உறுதிபடுத்த ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சக்தி தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் என்னும் இனவாத நிகழ்ச்சிக்கு தடையினை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் இந்த தொலைக்காட்சியில் முஸ்லிம்கள் தொடர்பில் எந்த கருத்தையும் வெளியிடக் கூடாது என்று இன ஒற்றுமைக்கான சர்வதேசத்திற்கான மையம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

 

இலங்கையினை தலைமையகமாக்க் கொண்டு செயற்படும் இந்த அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பகிரங்க பார்வையினை செலுத்தும் வகையில் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

 

இலங்கையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி வரிசையின் தரப்படுத்தலில் கடந்த காலங்களில் அரச ஊடகம் செயற்பட்ட விதம் தொடர்பில் ஜனாதிபதியாக தாங்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் கூறியதை இந்த தருனத்தில் தங்களது கவனத்திற்கு தருவதுடன்.இதனை விட மிகவும் அசிங்கமான முறையில் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சி அமைந்துவருவது இலங்கை வாழ் தமிழ்
பேசும் மக்கள் மத்தியில் பெரும் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

குறிப்பாக சக்தி நிறுவனத்தின் தலைமையின் அனுசரனையில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளை மின்னல் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து( பணம் கொடுத்து) தொடர்ச்சியாக இஸ்லாத்தின் மகத்துவம் தெரியாத மின்னல் நிகழ்ச்சியினை நடாத்தும் ஸ்ரீரங்கா என்பவர்.முஸ்லிம்களின் மனதை புன்படுத்தும் வகையில் செயற்படுகின்ற போது தொடர்ந்தும் தங்களது அரசு இந்த தொலைக்காட்சிக்கு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு இடமளிப்பது உங்கள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய நிலையினை முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்து வருகின்றது.

 

இந்த நாட்டில் பொது பலசேனா அமைப்பு செயற்பட்ட விதம்.அதற்கெதிராக அப்போதைய அரசு நடவடிக்கையெடுக்காமை என்ற காரணங்களால் ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்தார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

இவ்வாறானதொரு நிலையில் மின்னல் நிகழ்ச்சி நடத்துனர் முஸ்லிம்-தமிழ்.-சிங்கள மக்களை மோதவிடும் அளவுக்கு படுமோசமான ஊடக கலாசாரத்தை கட்டவிழ்த்து விட்டு வருவது தொடர்பில் தங்களை தெளிவுபடுத்துவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

 

இதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியானது.முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியினை விட சிறுபான்மை சமூகத்தின் குறிப்பாக முஸ்லிம்களை அவமதிக்கும் ஒன்று என்பதை எடுத்துக்காட்டும் மிலேச்சத்தனமானதொரு வேலையினை இந்த ஸ்ரீரங்கா செய்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தங்களை வேண்டுவதாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கோறியுள்ளதுடன்.முஸ்லிம் தொடர்பில் எந்த விதமான அறிக்கைகளையோ.கருத்துக்களையோ வெளியிடுவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பதையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் என்ற மமதையில் இந்த ஸ்ரீரங்கா தங்களையும்.தங்களது அரசையும் சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் மிக கேவலமிக்க ஒரு ஆட்சியாளன் என்ற பார்வையினை தோற்றுவிக்க அவர் பணியாற்றும் நிறுவனத்தின் அனுமதியுடன் அரங்கேற்றம் நடை பெறுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த ஒற்றுமைக்கான சர்வதேசத்திற்கான மையம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team