மின்னல் தாக்கி சிறுவன் பலி! - Sri Lanka Muslim
Contributors

மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு 7.30 அளவில் வீட்டில் இரண்டு சிறுவர்களும் தனியாக இருந்த போதே, இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் ஆணைமடு பகுதியைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவன் ஒருவனே பலியாகியுள்ளார்.

அத்துடன் காயமடைந்த 07 வயது சிறுவன் ஆணைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team