மின்வெட்டு இல்லை – உயர் நீதிமன்றுக்கு உறுதியளித்த மின்சார சபை! - Sri Lanka Muslim

மின்வெட்டு இல்லை – உயர் நீதிமன்றுக்கு உறுதியளித்த மின்சார சபை!

Contributors

உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டு விதிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 இலட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த காலப் பகுதியில் அமுலாக்கப்படும் எந்தவொரு மின்தடையும், அனுமதியற்றதும் சட்டவிரோதமானதுமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இன்றைய தினம் 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team