மியன்மாரிலிருந்து 100,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி - ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது! - Sri Lanka Muslim

மியன்மாரிலிருந்து 100,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி – ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!

Contributors

மியன்மாரிலிருந்து 100,000 மெட்ரிக் டன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், நேற்று (07) வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அரிசி இருப்பை பேணுவதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team