
மியன்மாரில் இராணுவப் புரட்சி றொஹிங்யா முஸ்லிம் இனப்படுகொலைகளை விசாரிக்க அமெரிக்க புதிய நிர்வாகம் எடுக்கவுள்ள முயற்சியை தடுக்கும் நாடகம்
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோய் பைடன் தனது ராஜாங்கத் திணைக்களத்தை வழிகாட்ட அன்தனி பிலிங்க் என்பவரை நியமித்துள்ளார். அவர் தனது முதலாவது அறிவுப்புக்களில் ஒன்றாக மியன்மாரில் இடம்பெற்றது றொஹிங்யா இன முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைதானா என்பதை உறுதி செய்ய அமெரிக்காவின் புதிய நிர்வாகம் உள்ளக மட்ட முகவராண்மைகள் ஊடான மீளாய்வு மட்ட விசாரணைகளைத் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் நடுவே தான் தற்போது மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய விசாரணை முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு செயல்தான் இந்த இராணுவ சதிப்புரட்சியா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
மியன்மார் பௌத்த பெரும்பான்மை மக்களைக் கொண்ட பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட ஒரு நாடாகும். இங்கு முஸ்லிம்கள் கணிசமாக வாழுகின்றனர். றொஹிங்யா இனத்தவர்கள் என அழைக்கப்படும் முஸ்லிம்கள் இங்கு சுமார் 13 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். மியன்மாரின் கனிப்பொருள் வளம் மிக்க வட பிராந்தியமான வங்காள விரிகுடாவின் கரையேரத்தில் அமைந்துள்ள றாக்கின் மாநிலம் தான் இவர்களின் பூர்வீக வசிப்பிடம்.
கடந்த பல நூற்றாண்டுகளாக இவர்கள் பிரதான சமயக் குழுவான பௌத்த மக்களோடு இணைந்து அமைதியாக வாழ்ந்து வந்துள்ளனர். சமாதானம் நல்லிணக்கம் இனங்களுக்கு இடையிலான சக வாழ்வு சமத்துவ உரிமைகள் என்பனவும் அங்கு காணப்பட்டன. அந்த நாட்டின் இராணுவ சேவை உற்பட பதவியில் இருந்த எல்லா அரசுகளிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் பதவியில் இருந்துள்ளனர்.
1948 முதல் 1963 வரை பதவியில் இருந்த பிரதமர் யு னூ தலைமையிலான அரசிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் பதவியில் இருந்துள்ளனர். வர்த்தகம் வியாபாரம் மற்றும் கைத்தொழில் முயற்சிகளில் சிறந்து விளங்கிய முஸ்லிம்கள் அங்கு செழிப்பாகவும் வசதியாகவும் வாழந்துள்ளனர். ஆனால் 1962ல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் தான் அங்கு முஸ்லிம்கள் அழிவுகளை எதிர்கொள்ளத் தொடங்கினர். முஸ்லிம்களுக்கு எதிரான மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பிரசாரங்களில் இராணுவம் ஈடுபட்டது. 1823க்கு முன்னர் இருந்த பர்மா முடியாட்சியோடு தொடர்புடைய விடயத்தில் தமது பூர்விகத்தை நிரூபிக்க முடியாத எவரும் மியன்மார் பிரஜைகளாகக் கருதப்பட மாட்டார்கள் என இராணுவம் அறிவித்தது. அதற்கான விதிமுறைகளையும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு இரவோடு இரவாக பல முஸ்லிம்களின் குடியுரிமையை கேள்விக்கு உள்ளாக்கியது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்தில் பௌத்த பயங்கரவாதி என வர்ணிக்கப்படும் அசின் விராத்து தேரர் ஒரு கூலிப்படையை உருவாக்கினார். இந்த ஆயுதம் தாங்கிய் குழுவுக்கு தேவையான ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விடப்பட்டனர். அவர்கள் முஸ்லிம் மக்களை வெளிப்டையாக மூர்க்கத் தனமாகத் தாக்கியதோடு அவர்களுக்கு எதிராக பௌத்த மக்களின் சிந்தனைகளையும் திட்டமிட்டுத் திசை திருப்பினர். பின்னர் தொடராக முஸ்லிம் கிராமங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். இன்னும் பலர் உயிரோடு எரியும் தீயில் வீசப்பட்டனர். சிறுவர்கள்இ பெண்கள்இ முதியவர்கள் என வயது விதம்தியாசமோ அல்லது பால் வித்தியாசமோ இன்றி இந்தக் கொடுமைகள் தொடர்ந்தன.
இனப் படுகொலையில் இருந்து தப்பிச் செல்லும் றோஹிங்யா அகதிகள்.
ஈவு இரக்கமற்ற இந்த காடையர் கூட்டம் செப்டம்பர் 11 தாக்குதலின் பின் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த உலக அபிப்பிராயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அந்த சம்பவத்தோடு எந்தத் தொடர்பும் அற்ற சில வேளைகளில் அது பற்றி எதுவுமே அறிந்தும் கூட இராத அப்பாவி மக்களைத் தாக்கினர். இதன் விளைவாக றோஹிங்யா முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டிலேயே இருப்பிடம் இல்லாதவர்களாக்கப்பட்டனர். ஏற்கனவே படிப்பறிவு இன்மையாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டடிருந்த அந்த சமூகம் இந்த நிலைமை காரணமாக சொல்லொணா வேதனைகளையும் கொடுமைகளையும் அனுபவிக்கத் தொடங்கியது. இது அவர்களை மிக மோசமான மனிதர்களாகச் சித்தரித்தது. கடந்த இரண்டு முதல் மூன்று தசாப்தங்களாக இந்த நிலைதான் நீடித்து வருகின்றது. கடந்த தசாப்த காலத்தில் இது மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த மக்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் உலகம் கண்டு கொள்ளவே இல்லை.
காடையர் கூட்டத்தின் காட்டுமிராண்டிப் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த றோஹிங்யா மக்கள் அதற்காக கொடுத்த விலைகள் அதிகம். பல மைல் தூரங்களை அவர்கள் நடந்தே கடக்க வேண்டி இருந்தது. அதுவும் முழங்காலுக்கு மேல் உள்ள சேற்று நீரில் கால்கள் புதையுண்டு போகும் கடுமையான நிலையில் சதுப்பு நிலங்களை அவர்கள் கடக்க வேண்டி இருந்தது. பலர் தமது அன்புக்குரிய சின்னஞ்சிறுசுகளையும் முதியவர்களையும் தோளில் சுமந்தவாறு இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின் போது அவர்கள் எழுப்பிய அவலக் குரலோ அல்லது சிந்திய இரத்தக் கண்ணீரோ உலக மக்களின் பார்வையில் படவும் இல்லை. செவிகளுக்கு எட்டவும் இல்லை.
இனப் படுகொலயின் அடையாளங்கள்
2015 ஆகஸ்ட் 25 முதல் இராணுவுக் காடையர்களும் அவர்களின் அனுசரணை பெற்ற ஆயுதக் குழுக்களும் றோஹிங்ய முஸ்லிம் சனத்தெகையை றாகிங் மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்க மிக நுட்பமான முறையில் திட்டமிட்டு செயற்பட்டனர். றோஹிங்யா மக்களின் எஞ்சியிருந்த வளங்களை மியன்மார் இராணுவம் கொள்ளையடித்தது. அவர்களைக் கொலை செய்தது. பெண்களைக் கதறக்கதற கற்பழித்தது. வன்முறையில் இருந்து தப்பிய நூற்றுக் கணக்கான மக்கள் தமக்கு எற்பட்ட கதியை மனித உரிமைக் கண்காணிப்பகம் உற்பட ஏனைய மனித உரிமை அமைப்புக்களோடு பகிரங்கமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். மியன்மாரின் ஜனநாயகத் தலைவி என வர்ணிக்கப்பட்ட ஆங் சோங் சூகி இந்த மக்களின் கதறல்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. இனச் சுத்திகரிப்பு போர்வையில் பாரிய அளவில் பெண்கள் கற்பழிக்கப்பட்டமை பற்றியோ கொல்லப்பட்டமை பற்றியோ வாய் திறக்காத அவர் இராணுவத்துக்காகவே வக்காளத்து வாங்கினார்.
றோஹிங்யா முஸ்லிம்கள் கதறக்கதறக் கொல்லப்பட்டபோது பெண்கள் தமது பிள்ளைகள் முன்னிலையிலும் கணவன மற்றும் பெற்றோர் முன்னிலையிலும் மிருகத்தனமாகக் கற்பழிக்கப்பட்டபோது றோஹிங்யா மக்கள் உயிரோடு தீயில் வீசப்பட்டபோது கூர்மையான ஆயுதங்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டபோது தமது வீடுகளில் இருந்து ஓடஓட விரட்டி அடிக்கப்பட்ட போது அந்த நாட்டில் ஜனநாயகத்தின் தலைவியாக இருந்தவர் தான் ஆங் சோங் சூகி. 2016 டிசம்பரில் சிரியாவின் அலெப்போ நகரம் பயங்கரவாதிகளிடம் வீழ்ந்த போது நோபல் பரிசு வென்றிருந்த பலர் றாகின் மாநிலத்திலும் இனச் சுத்திகரிப்பும் மனித குலத்துக்கு எதிரான கடும் குற்றங்களும் இடம்பெற்று வருவதாக பகிரங்க கூட்டு கடிதம் ஒன்றின் மூலம் உலகுக்கு எச்சரித்தனர்.
பங்களாதேஷை வந்து சேர்ந்த றோஹிங்யா இனப் பெண்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் அங்குள்ள ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களிடம் தாங்கள் மியன்மார் இராணுவத்தால் ஒன்றில் கற்பழிக்கப்பட்டதாக அல்லது வேறு விதமான பாலியல் சித்திரவதைகளுக்கு அளானதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
இனப் படுகொலையில் இருந்து தப்பிச் செல்லும் றோஹிங்யா அகதிகள்.
இனப் படுகொலயின் அடையாளங்கள்
“என் கண் எதிரிலேயே எனது கணவனை கொடூரமாகத் தாக்கினர். ஐந்து பேர் எனது துணிகளைக் கிழித்தெறிந்து என்னை மாறி மாறி கற்பழித்தனர். என்னுடைய எட்டு மாதக் குழந்தை பசியால் கதறக் கதற அவர்கள் அதைப் பொருட்படுத்தாது என்மீது விடாமல் குற்றம் புரிந்தனர். கடைசியில் ஒருவன் அந்தக் குழந்தையின் வாயை இறுகப் பொத்தினான். அது மூச்சுத் திணறி அங்கேயே மரணித்தது என்று தனது சோகத்தை விளக்கினாள் ஒரு பாதிக்கப்பட்ட பெண்.
2017 பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள ஒரு ஆவண அறிக்கையில் எந்தளவு பரவலான முறையிலும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்திலும் மியன்மார் இராணுவம் றோஹிங்யா முஸ்லிம்கள் மீது குற்றங்களைப் புரிந்துள்ளது என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் அதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. றொஹிங்யா முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வரக் கூடாது என்பதை குறிக்கோளாகக் கொண்டே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் இந்தக் கொடூரங்கள் புரியப்பட்டுள்ளன என்றும் அதில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தயாரித்துள்ள ஒரு அறிக்கையிலும் பரவலான முறையில் மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் உருவாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதவ்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளராக இருந்த செயித்; றாத் அல் ஹ{ஸேன் றொஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் இராணுவம் இழைத்த குற்றங்கள் ஒரு பாடப்புத்தக உதாரணங்களைப் போன்றவை என்று வர்ணித்திருந்தார். திபெத்தின் பௌத்த மதத் தலைவர் கௌரவத்துக்குரிய தலாய் லாமா ‘பௌத்த தீவிரவாதம் மியன்மாரில் றொஹிங்யா சிறுபான்மை இன முஸ்லிம்கள் மீது கொடூரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது’ என்று கூறினார். அதை விட ஒரு படி மேலே சென்று அவர் புத்தர் இன்று உயிரோடு இருந்திருந்தால் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள றொஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்திருப்பார் என்றும் கூறினார்.