
மியன்மார் இராணுவத்தின் முக்கிய பக்கத்தை நீக்கியது பேஸ்புக்
பெப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இரண்டு எதிர்ப்பாளர்கள் உயிரிழந்த ஒரு நாள் கழித்து, மியன்மார் இராணுவத்தின் முக்கிய பக்கத்தை பேஸ்புக் ஞாயிற்றுக்கிழமை நீக்கியது.
“எங்கள் உலகளாவிய கொள்கைகளுக்கு ஏற்ப, வன்முறையைத் தூண்டுவதையும், தீங்குகளை ஒருங்கிணைப்பதையும் தடை செய்யும் எங்கள் சமூகத் தரங்களை மீண்டும் மீண்டும் மீறியதற்காக டாட்மாடா உண்மை செய்தி தகவல் குழு பக்கத்தை பேஸ்புக்கிலிருந்து அகற்றியுள்ளோம்” என்று ஒரு பேஸ்புக் பிரதிநிதி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மியன்மார் இராணுவம் டாட்மாடா என்று அழைக்கப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் பேஸ்புக் மியன்மாரில் உள்ள சிவில் உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயக அரசியல் கட்சிகளுடன் ஈடுபட்டுள்ளதுடன், ஆன்லைன் வெறுப்பு பிரச்சாரங்களை கட்டுப்படுத்தத் தவறியதற்காக கடும் சர்வதேச விமர்சனங்களுக்கு உள்ளானது.
இது தொடர்பான ரொய்ட்டர்ஸ் தொலைபேசி அழைப்புக்கு இராணுவ செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கவில்லை.
ஆங் சான் சூகி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரும் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது சனிக்கிழமை மியன்மாரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.