‘மிஸ்னா மிர்ஸாத்’ எழுதிய ‘விழித்திடு சமூகமே’ நூல் வெளியீடு » Sri Lanka Muslim

‘மிஸ்னா மிர்ஸாத்’ எழுதிய ‘விழித்திடு சமூகமே’ நூல் வெளியீடு

Contributors
author image

M.S.M.ஸாகிர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற ஒரு நாள் ஊடக கருத்தரங்கும் மற்றும் அரனாநாயக திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி மிஸ்னா மிர்ஷாத்தினால் எழுதப்பட்ட விழித்திடு சமூகமேஎன்ற கவிதை நூல் மற்றும் எட்டாச் சிகரம்எனும் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் திப்பிடிய வில்பொலை அஷ்ரப் மண்டபத்தில் கடந்த (25) சனிக்கிழமை திப்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் எம். ஐ. எம்.எம். ஸாபிரீன் மற்றும் கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளரும் அல் – மனார் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவருமான பர்ஹான் உமர் ஆகியோரின் தலைமையில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம், கௌரவ அதிதியாக முன்னாள் பிரதி அமைச்சர் மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரநாயக்க தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி லலித் திஸாநாயக்க மற்றும் முதன்மை அதிதிகள், விசேட அதிதிகள், ஸ்ரீலங்கா மீடியா போர உறுப்பினர்கள் உட்பட உயரதிகாரிகள், பெற்றோர்கள் மாணவர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டதோடு, கலந்து கொண்ட மாணவர்கள் சகலருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மிஸ்னா மிர்ஸாத் எழுதிய ‘விழித்திடு சமூகமே’ நூலின் விமர்சனத்தை ரத்தினச் சுருக்கமாக பல்கலைக்கழக முன்னாள் உப பீடாதிபதியும் நவமணி பத்திரிகையின் ஆசிரிய பீட சிரேஷ்ட உறுப்பினருமான ‘காவ்யாபிமானி’ கலைவாதி கலீல் நிகழ்த்தினார்.

நிகழ்வினை முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹ்மத் முன்னவ்வர் நெறிப்படுத்தினார்.

am bo bo.jpg2 bo.jpg2.jpg3 bo.jpg2.jpg3.jpg6 bo.jpg2.jpg4 bo.jpg2.jpg66

Web Design by The Design Lanka