மீட்கப்படாத மாடுகள் தொடர்பிலான அறிவித்தல்! - Sri Lanka Muslim

மீட்கப்படாத மாடுகள் தொடர்பிலான அறிவித்தல்!

Contributors

பாதைகள், சந்தைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றில் இடையூறாகவும் தொல்லையாவும் காணப்பட்ட குறித்த தொகை கால்நடைகள் கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு, மாநகர சபைக்கு சொந்தமான காணியினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமக்குச் சொந்தமான கால்நடைகள் மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டும் இதன் உரிமையாளர்கள் இவற்றை பாரமேற்காமல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

கால்நடைகளை பராமரிப்பதில் மாநகர சபைக்கு உள்ள கஷ்டங்களைக் கொண்டோ மாநகர சபையின் உத்தியோகத்தர், ஊழியர் எவருடையதும் ஒத்துழைப்பையோ எதிர்பார்த்து இவ்வாறு கால்நடை உரிமையாளர்கள் செயற்பட்டுள்ளார்கள் என நிரூபிக்கப்படுமாயின் குறித்த நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

இக்கால்நடைகளை பராமரிக்கும் அனுபவம் வாய்ந்த தினக்கூலி பெறக்கூடிய வேலையாட்கள் யாரும் இருப்பின் மாநகர சபையினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இணைக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள கால்நடைகளில் இடப்பட்டுள்ள குறிகள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து உரிமையாளரை அடையாளம் காண்பதற்கும் தகவல்களை எத்தி வைப்பதற்குமாக இந்த அறிவித்தல் பகிரப்படுகிறது.

 

 

Web Design by Srilanka Muslims Web Team