மீண்டும் பயணத்தடை? - Sri Lanka Muslim
Contributors

பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள்    கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது சுகாதார பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,

கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்​டை மீண்டும் முழுமையாக முடக்கப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team