மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் - Sri Lanka Muslim

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக பேராசிரியர்கள்

Contributors

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீண்டும் போராட்டம் நடாத்தத் தீர்மானித்துள்ளனர். இவர்களின் சம்பள அடிப்படைக்கான முரண்பாடுகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மீளவும் தமது தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றியுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றி தருவதாக அரசாங்கம் எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார். தமது சம்பளத்தை 25 வீதத்தினால் உயர்த்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனபதற்காகவே தாம் போராட்டம் நடாத்தத் தீர்மானத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team