மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கவும் - கடற்றொழில் திணைக்களம் - Sri Lanka Muslim

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்களம்

Contributors

சீரற்ற வானிலை நிலவுவதால் காலி முதல் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற் பகுதியில்  கடற்றொழிலை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முன்னெச்சரிக்கையை அடுத்து கடற்றொழில் திணைக்களம் மீனவர்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் காலி முதல் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற்பிரதேசம் கொந்தளிப்பாகவும் அபாயகரமாகவும் அமையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பிரதேசத்தில் காற்றின் வேகமும் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியத்திலும் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team