மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! - மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம். - Sri Lanka Muslim

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! – மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்.

Contributors

பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில், தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகில், மீன் பிடிப்பதற்காக, 26ம் தேதி கடலுக்கு சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பகல், 1:30 மணிக்கு, இலங்கை கடற்படையினர், அங்கு வந்துள்ளனர். அவர்கள் முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல், தமிழக மீனவர் மீது, துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இதில் படகு சேதம் அடைந்தது; மீனவர்கள் உயிர் தப்பி வந்துள்ளனர். அப்பாவி தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், அவ்வப்போது தாக்கப்படுவது, அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இலங்கை கடற்படையினரின் தாக்குதலை, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் தடுப்பதில்லை. ஏற்கனவே, 75 தமிழக மீனவர், 35 படகுகள், இலங்கை கடற்படையினர் வசம் உள்ளது; இது மிகவும் ஆபத்தானது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளான, பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா பகுதியில், அவர்களின் உயிர், தொழில், மீன்பிடி உரிமை, ஆகியவற்றை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team