ஆஸ்திரேலியா: முஸ்லிம் பெண்களுக்கு புதியச் சட்டம்! - Sri Lanka Muslim

ஆஸ்திரேலியா: முஸ்லிம் பெண்களுக்கு புதியச் சட்டம்!

Contributors

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய மாகாணம் ஒன்றில் போலீஸாரிடம் அடையாளத்தை நிரூபிக்க முஸ்லிம் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் பர்தாவை விலக்கி முகத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

முஸ்லிம் மற்றும் சீக்கிய மதத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு இந்தப் புதிய சட்டம் மேற்கு ஆஸ்திரேலிய மாகாண சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு ஆஸ்திரேலியாவின் தாற்காலிக காவல்துறை அமைச்சர் ஜான் டே கூறியதாவது:

முஸ்லிம் மற்றும் சீக்கிய மதத்தவர்களின் ஆலோசனைக்குப் பிறகு முக்காடு என்ற வார்த்தைக்குப் பதிலாக முகம் மூடும் துணி என்று திருத்தம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திருத்தம் சம்பந்தப்பட்ட மதங்களைச் சேர்ந்தவர்களின் கவலைகளைப் போக்கியுள்ளது. இந்தச் சட்டத்தில் திருப்திகரமான சமரசம் எட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜான் டே தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team